ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான குழுவினர் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளனர்.
இலங்கை தொடர்பிலான பிரேரணை எதிர்வரும் 6ஆம் திகதி கொண்டுவரப்படவுள்ள நிலையில், அது தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் நோக்கில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
அதேநேரம், இந்தப் பயணத்தின்போது, பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிடுவதற்காக மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளுடன் விசேட கலந்துரையாடல்களை அமைச்சர் சப்ரி தலைமையிலான குழுவினர் மேற்கொள்ளவுள்ளனர்.
அத்துடன், பிரேரணை இறுதி வடிவம் பெறுவதற்கு முன்னதாக, இணை அனுசரணை வழங்கும் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மன் உள்ளிட்ட நாடுளின் வதிவிடப்பிரதிநிதிகளை சந்தித்து தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தவுள்ளனர்.
இதேவேளை, ஐ.நா.வின் பல்வேறு மட்டத்தரப்பினரையும் இலங்கைக்குழுவினர் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த செப்டெம்பர் முதல்வாரத்தில் ஜெனிவா சென்றிருந்த இக்குழுவினர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய அறிக்கைக்கு பதிலளித்ததுடன் சர்வதேச தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் சப்பரி, ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றதோடு பின்னர் நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment