பல்வேறு விருதுகள் பெற்ற பிரபல இலங்கை நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

பல்வேறு விருதுகள் பெற்ற பிரபல இலங்கை நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

பல்வேறு விருதுகளைப் பெற்ற பிரபல இலங்கை நடிகர், தர்ஷன் தர்மராஜ் காலமானார்.

இறக்குவானையை பிறப்பிடமாகக் கொண்ட தர்ஷன் தர்மராஜ் மாரடைப்பு காரணமாக திடீர் சுகவீனமுற்ற நிலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மரணிக்கும் போது அவருக்கு 41 வயதாகும்.

இலங்கையின் சினிமாத் துறையில் சிங்கள திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் பல்வேறு குணச்சித்திரங்களில் நடித்துள்ள அவர் பல்வேறு விருதுகளுக்கும் சொந்தக்காரராவார்.

குறிப்பாக, 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட 'இனி அவன்' எனும் திரைப்படத்தில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கதாபாத்திரத்தில் நடித்த அவர், பல்வேறு திரைப்பட விருது வழங்கும் விழாக்களில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தில் இறக்குவானையில் பிறந்த அவர், தனது ஆரம்ப கல்வியை புனித ஜோன்ஸ் கல்லூரியில் முன்னெடுத்திருந்தார்.

தமிழ் பேசுபவரான தர்ஷன் தர்மராஜ் 2008ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட 'பிரபாகரன்' எனும் திரைப்படத்தில் அறிமுகமாகியிருந்தார்.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் 07ஆம் திகதி வெளியிடப்படவுள்ள 'பிராண' சிங்களத் திரைப்படத்திலும் பிரதான பாத்திரமொன்றில் தர்ஷன் தர்மராஜ் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் பிரபல இலங்கை நடிகை நிரஞ்சனி சண்முகராஜாவும் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரபாகரன், இனி அவன், சுனாமி, மச்சன், கபடி, தெவன விஹங்குன் உள்ளிட்ட 23 திரைப்படங்களில் தர்ஷன் தர்மராஜ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment