ஒக்டேன் 92 பெற்றோல் விநியோகிக்கும் இரண்டு இயந்திரங்களுக்கு சீல் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 1, 2022

ஒக்டேன் 92 பெற்றோல் விநியோகிக்கும் இரண்டு இயந்திரங்களுக்கு சீல்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில். இரண்டு ஒக்டேன் 92 பெற்றோல் விநியோகிக்கும் இயந்திரங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சீல் வைத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் கிடைத்த புகார்களின் அடிப்படையில் அனைத்து எரிபொருள் நிலையங்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பம், எடை மற்றும் அளவீட்டுத்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் தரம் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக கடந்த மாதம் மட்டும் 100 க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளதாகவும் சுமார் 100 இடங்களில் இருந்து 100 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் 10% நிலையங்களில் தரம் குறைந்த எரிபொருள் இருப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment