இவ்வருடத்தில் முதன்முறையாக பண வீக்கத்தில் வீழ்ச்சி ! - News View

About Us

About Us

Breaking

Monday, October 31, 2022

இவ்வருடத்தில் முதன்முறையாக பண வீக்கத்தில் வீழ்ச்சி !

(நா.தனுஜா)

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த செப்டெம்பரில் 69.8 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பண வீக்கம், அக்டோபரில் 66 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருப்பதுடன் இவ்வருடத்தைப் பொறுத்தமட்டில் பண வீக்கத்தில் அவதானிக்கப்படும் முதலாவது வீழ்ச்சி இதுவாகும்.

அதேபோன்று கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கும் மதிப்பீட்டில் உணவுப் பண வீக்கமும் குறிப்பிடத்தக்களவால் வீழ்ச்சியடைந்துள்ளது.

நாடு முகங்கொடுத்திருக்கும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் விளைவாக உணவு மற்றும் உணவல்லாப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டிருக்கும் தொடர்ச்சியான அதிகரிப்பினால் கடந்த ஒரு வருட காலமாக பண வீக்கம் உயர்வடைந்து வருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்வருடத்தில் முதன்முறையாகக் கடந்த அக்டோபர் மாதம் பண வீக்கம் 69.8 சதவீதத்திலிருந்து 66 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

கடந்த செப்டெம்பரில் பழங்கள், கோழி இறைச்சி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு, உணவகம், சுகாதாரம், கல்வி, தொடர்பாடல் போன்ற உணவல்லாப் பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே செப்டெம்பர் மாதத்தில் பண வீக்கம் 69.8 சதவீதமாக உயர்வடைவதற்குப் பிரதான காரணமென மத்திய வங்கி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment