உலக குடியிருப்பு தினத்தின் தேசிய வைபவம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாளை (03) காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
"பாரபட்சம் காட்டாதிருப்போம். யாரையும் எந்த இடத்தையும் கைவிடாது பாதுகாப்போம்" என்ற தொனிப் பொருளில் இது நடத்தப்படுகிறது.
உலக குடியிருப்பு தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் முதல் திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. மற்றும் இந்த ஆண்டு 36 வது ஆண்டு நிறைவாகும்.
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து நகர்ப்புற குடியிருப்பு மக்களுக்காக ஏற்பாடு செய்திருந்த சிறுவர்களுக்கான ஓவியம், குறும்படம் மற்றும் தோட்டக்கலை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படவிருக்கின்றன. அத்துடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்வும் இங்கு இடம்பெறவுள்ளது.
மே 9 ஆம் தேதி கலவரத்திற்குப் பிறகு இந்த நாட்டில் நடைபெறும் முதல் சர்வதேச தினக் கொண்டாட்டம் இதுவாகும்.
அத்துடன், அலரி மாளிகை போராளிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேசிய நினைவேந்தல் தின நிகழ்வு இதுவாகும்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சின் இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெர்னாண்டோ, தேனுக விதானகமகே, ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புத் திட்டத்தின் தலைவர் லக்ஷ்மன் பெரேரா ஆகியோர் உள்ளிட்ட மற்றும் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
முனீரா அபூபக்கர்
No comments:
Post a Comment