இதுவரை 837 சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளை நடத்தியுள்ளோம் : இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 2, 2022

இதுவரை 837 சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளை நடத்தியுள்ளோம் : இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர்

2021 ஜூலை 1 முதல், இதுவரை 837 சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளை நடத்தியுள்ளதாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

30 சுப்பர் லீக் போட்டிகள், 33 மாகாண போட்டிகள், 91 சம்பியன்ஸ் லீக் போட்டிகள், தங்கம்/வெள்ளிக் கோப்பை போட்டிகள் உட்பட நாடு பூராவும் 652 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

அதன்படி 2021ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற உள்நாட்டுப் போட்டிகளின் மொத்த எண்ணிக்கை 806 ஆகும். இந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற மொத்த சர்வதேசப் போட்டிகளின் எண்ணிக்கை 31 ஆகும்.

தேசிய அணி 11 போட்டிகளில், பெண்கள் அணி 02 போட்டிகளில், 23 வயதுக்குட்பட்ட அணி 03 போட்டிகளில், 19 வயதுக்கு கீழ்பட்ட அணி பெண்கள் அணி 05 போட்டிகளிலும், 20 வயதுக்குட்பட்ட அணி 07 போட்டிகளிலும், 17 வயதுக்குட்பட்ட அணி 03 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது.

கத்தாரில் 09 நாள் பயிற்சி முகாம், சவூதி அரேபியாவில் 17 நாள் பயிற்சி முகாம், மீண்டும் கத்தாரில் 9 நாள் பயிற்சி முகாம் 03 சர்வதேச பயிற்சி முகாம்கள் என்பனவும் நடத்தப்பட்டுள்ளன.

2021 ஜூலை 01 க்கு முன் 33 போட்டிகள் மட்டுமே நடாத்தப்பட்டன. கால்பந்தாட்டத்தை மேம்படுத்துவதற்கு விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டி அனுபவங்கள் மிகவும் அவசியமானது என்றும், இலங்கையர்களுக்கு கிரிக்கெட் போலவே கால்பந்தையும் பிரபலமாக்குவதே தனது நோக்கமாகும் என்றும் ஜஸ்வர் உமர் கூறிப்பிட்டார்

No comments:

Post a Comment