கோட்டாபயவின் நிழல் அரசாங்கமே இன்னும் நாட்டை ஆட்சி செய்கிறது : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

கோட்டாபயவின் நிழல் அரசாங்கமே இன்னும் நாட்டை ஆட்சி செய்கிறது : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

(எம்.வை.எம்.சியாம்)

கோட்டாபயவின் நிழல் அரசாங்கமே இன்னும் நாட்டை ஆட்சி செய்வதோடு உலகம் முன்னோக்கி நகர்ந்தாலும் எமது நாடு அதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பதோடு; அவர்களுக்கு நாடு செல்லும் திசை பற்றிய புரிதல் இல்லை. நாடு இவ்வாறானதொரு இக்கட்டான நிலையிலுள்ள போதும் அமைச்சரவை நிதியை சுரண்டுவதோடு குறைந்த பட்சம் அரசாங்கத்திற்கு எதற்கும் எந்த வேலைத்திட்டமும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

வெல்லவாய, தனமல்வில பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கோப் குழு மற்றும் கோபா குழுவின் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் என்று சபாநாயகர் கூறினாலும் ரணில் விக்கரமசிங்க ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாப்பதால் தலைவர் பதவி கனவாகவே உள்ளது.

ராஜபக்ஷ விசுவாசமானவர்கள்தான் தேசிய பேரவைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரணில் விக்ரமசிங்க கூட காக்கை நிதி அமைச்சரின் உத்தரவின் கீழே செயற்படுகிறார். இந்நிலையில் கோட்டாபயவின் நிழல் அரசாங்கமே இன்னும் நாட்டை ஆட்சி செய்து வருகிறது.

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் மக்களின் வரிப் பணத்தின் மூலம் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தியதாகவும் சுதந்திரத்திற்குப் பின் உருவாகிய ஒவ்வொரு எதிர்க்கட்சியும் மக்களுக்கு சேவை செய்வதை விடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பெற திட்டமிட்டுச் செயல்படுவதால்தான் அவர்களும் ஒன்று இவர்களும் ஒன்று என்ற கருத்தோட்டம் உருவாகியுள்ளது.

இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி மாற்றுப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு முன்நிற்கிறது.

இன்று இவ்வாறே அவர்களும் ஒன்று, இவர்களும் ஒன்று என்று கூறுபவர்கள் அன்று சுனாமி திருடன் என்று முத்திரை குத்தப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாவதற்கு வீடு வீடாகச் சென்றவர்கள் எதிர்க்கட்சியில் இருந்த காலப்பகுதியில் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு கொவிட் காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியினால் 52 மருத்தமனைகளுக்கு 1500 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் உதவி பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது தனமல்வில தேசிய பாடசாலைக்கு விரைவில் பேருந்து வசதி செய்து கொடுப்பதாகவும் ஜோன் டாபர்ட் தடகள விழாவில் 18 வயதிற்கு உட்பட்ட உயரம் பாய்தல் போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற வீரர் அனுஹாஸுக்கு நிதியுதவியையும் எதிர்க்கட்சி தலைவர் வழங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment