பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலை உணவு - கீதா குமாரசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலை உணவு - கீதா குமாரசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாலர் பாடசாலை மாணவர்களுக்கு காலை நேர உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம். எதிர்வரும் நவம்பர் மாதம் ஆகும்போது நாட்டில் இருக்கும் அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

சிறுவர்களின் மந்த போசனம் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான காலை நேர இலவச உணவு திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆகும்போது நாட்டில் இருக்கும் அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வதற்கான திட்டத்தை தயாரித்திருக்கின்றோம். ஏனெனில் தாய்ப்பாலுக்கு பின்னர் குழந்தைகள் பாலர் பாடசாலைக்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். இதன்போது அவர்களுக்கு போஷாக்கு கிடைக்க வேண்டும்.

அத்துடன் பிள்ளைகளின் ஆரம்பம் தாயின் கர்ப்பறையாகும். அதனால் கர்ப்பிணி தாய்மாருக்கு போஷாக்கு உணவுக்காக 10 மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படுகின்றது. அந்த தொகைக்கு மேலும் 250 ரூபா சேர்த்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

குழந்தைகள் போஷாக்கு குறைபாடு இல்லாத குழந்தைகளாக பிறப்பதற்கு தாய் கர்ப்ப காலத்தில் போஷாக்கான உணவு எடுத்துக் காெள்ள வேண்டும். அதனாலே கர்ப்பிணி தாய்மாருக்கு போஷாக்கு பொதி வழங்கும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றோம்.

No comments:

Post a Comment