ராஜபக்ஷக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒருவரையே ஜனாதிபதியாக நியமித்திருக்கிறார்கள் - சஜித் பிரேமதாஸ - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

ராஜபக்ஷக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒருவரையே ஜனாதிபதியாக நியமித்திருக்கிறார்கள் - சஜித் பிரேமதாஸ

(எம்.வை.எம்.சியாம்)

ராஜபக்ஷ அரசாங்கம் தன்னை பிரதமர் பதவிக்கு அழைத்து தனது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதையே எதிர்பார்த்திருந்ததாகவும் இருப்பினும் அது நடக்காத காரணத்தினால் ராஜபக்ஷக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒருவரையே தற்போது ஜனாதிபதியாக நியமித்திருக்கிறார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம, பெரலிஹெலவில் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்றையதினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மக்கள் எழுச்சி போராட்டத்தால் இராஜினமா செய்ய வேண்டி ஏற்பட்ட ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர்களுக்குப் பதிலாக தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் ஒருவரையே நாட்டின் தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டிய தேவை அன்று அவர்களுக்கு ஏற்பட்டது.

இருப்பினும் அன்று தன்னை பிரதமர் பதவிக்கு அழைத்து சில நாட்களுக்குப் பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து தனது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுக்கு கட்டுவதையே அவர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.

இதனை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அரசியலில் அனுபவம் இல்லாதவர் அல்ல. இது போன்ற ஏமாற்று வித்தைகளை நம்பி ஏமாற மாட்டேன். அரசாங்கம் தொடர்ந்து செயல்பட முடியாது என்பதை நிரூபித்துள்ளது. இவ்வாறான அரசாங்கத்திடம் தாம் ஒன்றையே கோருவதாகவும் அது தேர்தலை தவிர வேறொன்றும் இல்லை.

குடிமக்களின் போராட்டம் காரணமாக முன்னாள் நிதியமைச்சர் பிரதமர் மற்றும் ஜனாதிபதி முறையே வீட்டுக்குச் சென்றார்கள். சூட்சமமாக மொட்டுத் தலைவர்களால் தங்களுக்கு நட்பாக இருக்கும் தற்போதைய ஜனாதிபதியை நியமித்து கொண்டு ஆட்சியில் இருக்கிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment