இலங்கை அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 13, 2022

இலங்கை அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமனம்

அரசாங்க ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக அசங்க பிரியநாத் ஜயசூரிய, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு தலைவராக கணக்காளர் கணக அமரசிங்க, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவராக ஹட்சன் சமரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (13) வெகுசன ஊடக, போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (13) வெகுசன ஊடக அமைச்சில் வைத்து அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
தலைவர்
அசங்க பிரியநாத் ஜயசூரிய

பணிப்பாளர் சபை
பேராசிரியர் சமிந்த ரத்னாயக
பேராசிரியர் டி.எம். அஜித் திசாநாயக்க
சட்டத்தரணி ரகித அபேகுணவர்தன

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு (ITN)
தலைவர்
கணக்காளர் கணக அமரசிங்க

பணிப்பாளர் சபை
சட்டத்தரணி லலித் பியும் பெரேரா
விரிவுரையாளர் திருமதி. மஹேஸ்வரி மஹிமதாஸ்
ரவிந்திர குருகே
இந்திக லியனஹேவகே
ஹசந்த ஹெட்டியாராச்சி

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC)
தலைவர்
ஹட்சன் சமரசிங்க

பணிப்பாளர் சபை
பேராசிரியர் வண. மாகம்மன பஞ்ஞானந்த தேரர்
பிரியந்த கே. ரத்நாயக்க
ஜே. யோகராஜ்
எம். சிசிர குமார

No comments:

Post a Comment