ஜனாதிபதியை எங்கள் பிரதிநிதிகள் எவரும் சந்திக்கவில்லை - மறுத்துள்ள கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக் காரர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 1, 2022

ஜனாதிபதியை எங்கள் பிரதிநிதிகள் எவரும் சந்திக்கவில்லை - மறுத்துள்ள கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக் காரர்கள்

ஜனாதிபதியை தாங்கள் சந்தித்ததாக வெளியான தகவல்களை கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர்.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்களை பிரதிநிதித்துவம் செய்வதாக தெரிவித்து இரண்டு பௌத்த மத குருமார் ஜனாதிபதியை சந்தித்துள்ளதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.

கேட் ஜீரோ அல்லது அரகலய அல்லது கோட்டா கோ கமவை சேர்ந்த எவரும் ஜனாதிபதியை சந்திக்கவில்லை என ஆர்ப்பாட்டக் காரர்களின் குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதே எங்களது முக்கிய வேண்டுகோள் என ஆர்ப்பாட்டக் காரர்கள் குழுவை சேர்ந்த ரண்டிமல் கமகே தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் போராட்டத்தினை சிதைக்கும் நோக்கத்துடன் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய கொள்கைகளிற்கான தொழில்வல்லுனர்களின் கூட்டமைப்பு என தம்மை அழைத்துக் கொள்பவர்கள் ஜனாதிபதியை சந்தித்து முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment