காசோலை மோசடி தொடா்பாக கிரிக்கெட் வீரா் மகேந்திர சிங் தோனி உட்பட 8 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிகாரின் பெகுசராய் பகுதியில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா என்ற நிறுவனம் மீது எஸ்.கே.எண்டர்பிரைசஸ் என்ற முகமை புகாா் மனு அளித்துள்ளது.
அந்தப் புகாா் மனுவின்படி, நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து எஸ்.கே.என்டா்பிரைசஸ் முகமை உரம் வாங்கியுள்ளது.
ஆனால் உரத்தை சந்தைப்படுத்துவதில் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனம் ஒத்துழைப்பு வழங்காததால் எஸ்.கே.எண்டர்பிரைசஸ் முகமைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்ட நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனம், ரூ.30 லட்சத்துக்கான காசோலையை எஸ்.கே.எண்டா்பிரைசஸிடம் வழங்கியுள்ளது.
அந்தக் காசோலையை வங்கியில் செலுத்திய போது, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியுள்ளது.
இது தொடா்பாக சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பியும் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து எந்தப் பதிலும் வராததால், நீதிமன்றத்தில் புகாா் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த உரத்தை மகேந்திர சிங் தோனி விளம்பரப்படுத்தியதால், அவா் உட்பட 8 பேரின் பெயர்கள் புகாா் மனுவில் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 28ஆம் திகதி அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment