பிரமருக்கு ஆதரவு தெரிவித்து அலரி மாளிகை வந்த SLPP ஆதரவாளர்கள் 'மைனா கோகம' 'கோட்டா கோகம' மீது தாக்குதல் : 20 இற்கும் அதிகமானோர் காயம் : பொதுமக்களுக்காக எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யத் தயார் என்கிறார் மஹிந்த - News View

About Us

About Us

Breaking

Monday, May 9, 2022

பிரமருக்கு ஆதரவு தெரிவித்து அலரி மாளிகை வந்த SLPP ஆதரவாளர்கள் 'மைனா கோகம' 'கோட்டா கோகம' மீது தாக்குதல் : 20 இற்கும் அதிகமானோர் காயம் : பொதுமக்களுக்காக எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யத் தயார் என்கிறார் மஹிந்த

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அலரி மாளிகைக்கு முன்பாக 'மைனா கோகம' என பெயரிடப்பட்டு அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு, அங்கிருந்த அவர்களது கூடாரங்கள் மற்றும் பதாகைகளை அழித்துள்ளனர்.

அத்துடன் அங்கிருந்து அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த அமைதியான ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் மேற்கொண்டு அங்கிருந்த கூடாரங்கள் பதாகைகள் உள்ளிட்டவற்றை தாக்கி அழித்து தீ வைத்துள்ளனர்.

இவ்வாறு அமைதியற்று நடந்து கொண்ட நபர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 இற்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டா கோ கம பகுதியில் இருந்த வாசிகசாலைக்கே முதலில் தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அங்கு முதலுதவிக்காக இருந்த St. John முதலுதவி கூடாரத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பொதுமக்களுக்காக எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யத் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுன ஆதரவாளர்களிடம் அலரி மாளிகையில் வைத்து இன்று தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment