நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் : மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, May 9, 2022

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் : மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அரசாங்க ஆதரவாளர்களுக்கும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையில் இன்று (09) கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து ஆரம்பத்தில் கொழும்பு, மேல் மாகாணம் முழுவதற்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பொலிஸ் ஊரடங்கு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால், நாட்டில் கடந்த 30 நாட்களாக மிக அமைதியாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல்களில் 23 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பிரதமரின் இல்லமான அலரி மாளிகைக்கை முன்பாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடாத்திய பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், அங்கிருந்து சுமார் 2 கி.மீ. இற்கும் அதிக தூரத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வந்த போராட்டக்களத்திற்கு வந்து அங்கும் சேதம் விளைவித்ததோடு, பலர் மீது தாக்குதல் நடாத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் அமைதியின்மை காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய மாணவர்கள் தற்போது அலரி மாளிகை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, அவர்களுக்கு ஆதரவாக தற்போது நூற்றுக் கணக்கானோர் அங்கு குழுமியுள்ளனர்.

No comments:

Post a Comment