மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க காலிமுகத்திடலுக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்நிலையில், போராட்டக் காரர்களுக்கு ஆதரவாக அவர் அவ்விடத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில், பல தொழிற்சங்க தலைவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
இதேவேளை கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் அரச ஆதரவாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்தை அடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்கள் காலி முகத்திடலிலிருந்து திரும்பிச் சென்றனர்.
No comments:
Post a Comment