கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரி மாளிகைக்கு அருகில் உள்ள ஆர்ப்பாட்டக் காரர்களின் உடைமைகள் மற்றும் வாகனங்கள் அனைத்தையும் அகற்றுமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடைபாதையை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆனால், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அமைதிப் போராட்டம் நடத்துவதைத் தடை செய்யவில்லை என்று நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, அலரி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பிரதமர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக, போராட்டம் நடைபெறும் இடத்தில் உள்ள நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றுமாறு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், போராட்டக் காரர்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மற்றும் சாலைத் தடுப்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராகவும் உத்தரவிட வேண்டுமெனத் தெரிவித்து குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment