பிரதமர் பதவி விலகுவார் என கற்பனை செய்திகள் : ஆராய்ந்து வெளியிடுமாறு கோருகிறார் இணைப்புச் செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 4, 2022

பிரதமர் பதவி விலகுவார் என கற்பனை செய்திகள் : ஆராய்ந்து வெளியிடுமாறு கோருகிறார் இணைப்புச் செயலாளர்

பிரதமர் பதவி விலகல் தொடர்பான செய்திகளின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராய்ந்து செய்திகளை வெளியிடுமாறு பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்திலேயே இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தொடர்பில் அண்மைய நாட்களாக சில செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக ‘பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்கிறார்' என்று அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன. 

அதன் பின்னர் தற்போது புதிதாக மற்றுமொரு செய்தியும் பரவி வருகிறது. ‘அடுத்த பாராளுமன்றம் கூடும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, விசேட அறிக்கையொன்றை விடுத்து பதவி விலகுவாரென அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொய்யான செய்தியாகும். இதுபோன்ற வதந்திகளை பரப்புபவர்கள், முதலில் செய்தியை சரிபார்க்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment