பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்பாக நடத்தப்பட்டு வந்த “மைனா கோ கம” போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டம் நடத்துவதற்கு கோட்டை நீதிமன்றம் இன்று தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவையடுத்து போராட்டத்துக்கென அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களை அகற்றுமாறும், பதாதைகளை அகற்றும்படியும் பொலிஸார் கோரியிருந்தனர்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் பெரும் வாக்குவாதங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் இன்று மாலை இந்த தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் அங்கிருந்து சென்றனர்.
இதேவேளை போராட்டத்தை தடுக்கும் வகையில் அங்க நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் பஸ்கள் மற்றும் வாகனங்களும் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment