பதவி விலகினார் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தலைவர் : சம்பளம் உள்ளிட்ட எந்தவொரு சலுகையையும் பயன்படுத்தவில்லை : அமைச்சர் ஹரீன் பேச வாய்ப்பு வழங்காமை வருத்தம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 24, 2022

பதவி விலகினார் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தலைவர் : சம்பளம் உள்ளிட்ட எந்தவொரு சலுகையையும் பயன்படுத்தவில்லை : அமைச்சர் ஹரீன் பேச வாய்ப்பு வழங்காமை வருத்தம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோ, தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோவிடம் கையளித்துள்ளார்.

புதிதாக குறித்த அமைச்சுப் பதவிக்கு கடந்த மே 20ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டுள்ள தங்களுக்கு, புதிய தலைவர் உள்ளிட்ட சபையை நியமிக்கும் வகையில் தாம் குறித்த பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

குறித்த பதவியில் 30 மாதங்களாக (2 1/2 வருடங்கள்) பதவி வகித்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தாம் இக்காலப் பகுதியில் தமக்குரித்தான சம்பளத்தையோ, வாகனத்தையோ பெறவில்லையென தெரிவித்துள்ள அவர், தமது வெளிநாட்டு பயணங்கள் மற்றும் தங்குமிட தேவைகளுக்கான செலவுகளை தமது சொந்த செலவில் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தாம் நாட்டுக்காக உதவ முன்வந்த இக்காலப் பகுதியில், வரி செலுத்துபவர்களின் பணத்தில் எந்த வகையிலும் பயன்பெறவில்லையென என சுட்டிக்காட்டியுள்ளார். 

தற்போது நாட்டுக்கு அவசியமாகவுள்ள இச்சந்தர்ப்பத்தில் ஏனையோரும் இந்நடைமுறையை பின்பற்ற ஊக்குவிப்பது சிறந்தது கிமலி பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

அது மாத்திரதமன்றி தாம் குறித்த காலப் பகுதியில் மேற்கொண்ட சேவைகள் தொடர்பிலும் தனது இராஜினாமா கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தமது முன்னெடுப்புகளுக்கு உதவியாக இருந்த சர்வதேச பங்காளர்கள், விமான சேவைகள், முக்கிய பங்குதாரர்கள், நிதியளிக்கும் முகவர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், இலங்கை மீது நம்பிக்கை வைத்து இணைந்து செயற்பட்டு வரும் தூதரகங்களுக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இதுவரை பின்பற்றப்பட்ட சிறந்த நடைமுறைகளை தங்களுக்கு வழிகாட்ட, முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும், இது தொழில்முறை ரீதியான நடைமுறைல்லவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், மே 21 மற்றும் 23ஆம் திகதிகளில் தாங்கள் நிர்ணயித்த இரண்டு சந்திப்புகள் இரத்து செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

குறிப்பாக நாட்டின் இந்த இக்கட்டான நேரத்தில், சுற்றுலாத் துறையானது மிக விரைவான அந்நியச் செலாவணி பலன்களை வழங்கும் என்பதை தெரிவிப்பதோடு, நீங்கள் வெளிப்படுத்திய கேவலமான அணுகுமுறை நல்லதல்ல என்பதை தெரிவிக்கிறேன். இவ்விடயத்தில் நான் தவறு என்பதை நிரூபிக்கப்படக்கூடியதாக இருக்க வேண்டுமென நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment