நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டுவருவது தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர். சமரசிங்கவின் தலைமையில் போதிய அதிகாரங்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம், மற்றும் முக்கிய கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர் அமரதுங்கவுக்கு மேலதிகமாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கலாநிதி ஷர்மினி குரே, முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
மங்கள சமரவீர நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் கலாநிதி ஆர். சமரதுங்க நிதியமைச்சின் செயலாளராக செயற்பட்டுள்ளார்.
அதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி செயற்பட்டார்.
அதற்கிணங்க கலாநிதி சமரதுங்க பிரசித்தி பெற்ற அரச நிர்வாக அதிகாரியாக அனைத்து தரப்பினரதும் கௌரவத்திற்கு பாத்திரமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment