இலங்கையில் கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிக்கலாம் - News View

About Us

About Us

Breaking

Monday, May 30, 2022

இலங்கையில் கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிக்கலாம்

எதிர்வரும் நாட்களில் கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் அதிகரிக்கலாம் என கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனடிப்படையில் ஒரு முட்டையின் விலை 50 ரூபா வரையும் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை ஆயிரத்து 200 ரூபா வரையும் அதிகரிக்கலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். 

கோழிப் பண்ணைகளுக்கு அடுத்த மாதத்திற்கு தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்களுக்கு வங்கிகள் ஊடாக 40 மில்லியன் டொலர்கள் கிடைக்க வேண்டும்.

டொலர்கள் கிடைத்தால், மேலும் ஆறு மாதங்களுக்கு கோழிப் பண்ணை தொழிலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும்.

எவ்வாறாயினும் தற்போது கோழி முட்டை உற்பத்திகள் 40 வீதமாக குறைந்துள்ளதுடன் கோழி இறைச்சி உற்பத்தி 30 வீதமாக குறைந்துள்ளது. 

இதன் காரணமாக கோழிப் பண்ணைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. எதிர்வரும் காலங்களில் மேலும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment