நாட்டில் மருந்துப் பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் அவசியமான டொலர்களை பெற்றுக் கொள்ள நாணய கடிதங்களை விடுவிக்காமல் மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாது என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவிக்கையில், மருந்துகளின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் அந்த விலைகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. எனினும் மக்கள் மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
வழமையாக மாதாந்தம் மருந்துகளுக்காக 3000 ரூபாவை செலவிடுபவர்கள் தற்போது சுமார் 9,000 ரூபாவை செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் செயற்பாடுகளும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. தனியார் மருந்தக நிறுவனங்கள் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லாத நிலையே காணப்படுகிறது. அரசாங்கம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பது அவசியம்.
மருந்து விற்பனை நிறுவனங்களினால் மருந்துகளின் விலை வெகுவாக அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் தமது தரப்பினரும் நோயாளிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மருந்துப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு உள்ளபோதும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலையிலேயே அந்த அதிகார சபை காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment