(எம்.மனோசித்ரா)
கணணி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்று பதிவாளர் நாயகம் ஜீ.ஏ.எல்.டீ.கனேபொல தெரிவித்துள்ளார்.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் இப்பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே நாடளாவிய ரீதியில் இவற்றை வழங்கும் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கணணி கட்டமைப்புக்கள் சீரமைக்கப்பட்டதன் பின்னர் சேவைகள் மீளத் தொடரும் என்றும் , அது குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment