சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை குறித்து பாராளுமன்றில் விசேட உரையாற்றவுள்ள நிதி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Monday, May 2, 2022

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை குறித்து பாராளுமன்றில் விசேட உரையாற்றவுள்ள நிதி அமைச்சர்

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்திற்கும், நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான பிரிநிதிகள் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து நிதியமைச்சர் புதன்கிழமை (4) பாராளுமன்றில் விசேட உரையாற்றவுள்ளார்.

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. புதன்கிழமையும் வியாழக்கிழமையும் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய் மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இவ்வாரம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது கொண்டு வர தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை குறித்து இதுவரை திகதி தீர்மானிக்கப்படவில்லை, எனவும் குற்றப்பிரேரணை குறித்து சட்ட ஆலோசனை கோரப்பட்ட நிலையில் உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்தரப்பினர் கொண்டு வருவார்களாயின் அதனை தோற்றடிக்க எம்மால் முடியும். பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வசம் உள்ளது என ஆளும் தரப்பின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment