வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது! - News View

About Us

About Us

Breaking

Thursday, May 5, 2022

வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் எரிபொருள் பின்வருமாறு வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்தெரிவித்துள்ளது.

அந்த வகையில்,
மோட்டார் சைக்கிள்கள் - ரூ. 2,000
மூன்று சக்கர வாகனங்கள் - ரூ. 3,000
கார்கள், வேன்கள் மற்றும் ஜீப்கள் - ரூ. 8,000

என்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பேருந்துகள், லொரிகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு இந்த நிபந்தனை கிடையாது எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment