அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 5, 2022

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியை இன்று மாலை ஆரம்பித்திருந்தனர்.

பாராளுமன்றத்திற்கு பேரணியாக சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடையை தகர்க்க முற்பட்ட போது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

“அரசாங்கத்தை விரட்டுவோம் - முறைமையை மாற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment