“இதுமட்டுமே மிஞ்சியுள்ளது” அரசாங்கத்துக்கு எதிராக இலங்கை மக்கள் உள்ளாடைப் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 6, 2022

“இதுமட்டுமே மிஞ்சியுள்ளது” அரசாங்கத்துக்கு எதிராக இலங்கை மக்கள் உள்ளாடைப் போராட்டம்

நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று (06) பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெறும் மக்கள் எழுச்சிப் பேராட்டத்தின் மற்றுமொரு வடிவமாக உள்ளாடை பேராட்டம் இடம்பெற்றது.

நாடு தழுவிய ரீதியில் இன்றையதினம் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் நாட்டின் பிரதான நகரங்களின் செயற்பாடுகள் முடங்கிப்போயுள்ளன. இதேவேளை, பல நகரங்களில் எதிர்ப்பு போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று (05) இரவு பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதியில் ஆரம்பிக்கப்பட்ட “ஹொரு ஹோ கம” பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் உள்ளாடைகளை தொங்கவிட்டு போராட்டம் நடைபெறுகிறது.

“இதுமட்டுமே மிஞ்சியுள்ளது” என்ற கோஷங்களோடும், பதாதைகளோடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆண், பெண்களது உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment