பங்களாதேஷ் சென்றடைந்தது இலங்கைக் கிரிக்கெட் அணி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 8, 2022

பங்களாதேஷ் சென்றடைந்தது இலங்கைக் கிரிக்கெட் அணி

எஸ்.ஜே.பிரசாத்

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை பங்களாதேஷ் நோக்கிப் புறப்பட்டது.

நண்பகலளவில் இலங்கை அணி பங்களாதேஷ் வந்தடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்விரு அணிகளும் மோதவுள்ள டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும். இப்போட்டியின் புள்ளிப்பட்டியலில் இலங்கை தற்போது ஐந்தாவது இடத்திலும் பங்களாதேஷ் எட்டாவது இடத்திலும் உள்ளன.

முன்னதாக நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்களாதஷ் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தது.

இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பயிற்சியளிக்கும் முதல் போட்டித் தொடர் இதுவாகும்.

அதனால் இந்தத் தொடர் அனைவரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. டெஸ்ட் தொடர் மிர்பூர் மற்றும் டாக்காவில் நடைபெறவுள்ள நிலையில் முதலாவது டெஸ்ட போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment