அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் இளைஞர் யுவதிகளுக்கு இலவசமாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அதற்கமைய 20 -25 கி.மீ தூரம் பயணிப்பதற்கு போதுமான டீசல் கொண்ட பேருந்துகளை அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்திற்கு எதிராக பேருந்துகளை பாராளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தி அமைதியான முறையில் போராட்டமொன்றை முன்னெடுக்க இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. போராட்டத்திற்கான தினம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை.
நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தால் காரணமாக பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதா இல்லையா என்பதும் தீர்மானிக்கப்படவில்லை. எனினும் பொதுமக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு சேவைகளை வழங்க நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
மேலும் அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் இளைஞர் யுவதிகளுக்கு இலவசமாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 20 - 25 கி.மீ தூரம் பயணிப்பதற்கு போதுமான டீசல் கொண்ட பேருந்துகளை இதற்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment