நாட்டு மக்கள் தற்போது அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை - வஜிர அபேவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Monday, May 2, 2022

நாட்டு மக்கள் தற்போது அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை - வஜிர அபேவர்த்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டு மக்கள் தற்போது அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. மாறாக எதிர்கொண்டுள்ள எரிபொருள், கேஸ் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொண்டு சாதாரண வாழ்க்கையை கொண்டுசெல்வதற்கு முடியுமான நிலைமையையே எதிர்பார்க்கின்றனர்.அதனால் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவி்த்தார்.

மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டியதன் தேவை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டு மக்களுக்கு தற்போது தேவையாக இருப்பது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இல்லாமலாக்கி 21ஆம் திருத்தத்தை கொண்டுவருவது அல்ல. மாறாக மக்கள் முகம்கொடுத்திருக்கும் எரிபொருள், கேஸ், மின்சாரம், மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்களை மீண்டும் பெற்றுக் கொண்டு சாதாரண வாழ்க்கையை ஆரம்பிப்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

அரசாங்கம் எடுத்த பிழையான தீர்மானம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் உண்மையான பிரச்சினையை உணர்ந்துகொண்டு, அவற்றுக்கு விரைவாக தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வாறு செயற்படாவிட்டால் நாடு பாரிய அழிவுக்கு தள்ளப்படும் நிலை இருக்கின்றது. அதனால் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு விரைவாக நாட்டுக்கு பொருளாதார தீர்வு தேவையாகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இதற்கான தீர்வை பாராளுமன்றத்துக்கு ஏற்கனவே சமர்ப்பித்திருக்கின்றார். அதனால் இது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment