ரணிலுக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் : தன்னை சந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ! - News View

About Us

About Us

Breaking

Friday, May 6, 2022

ரணிலுக்கு எதிராகவும், ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் : தன்னை சந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் !

முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பில் அமைந்துள்ள வீட்டுக்கு முன்னாலே இவ்வாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் “கோ ஹோம் ரணில்” மற்றும் “ஸ்டே ஹோம் ரணில்” எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும் அவரின் ஆதரவாளர்கள் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த பகுதியில் சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தன்னை சந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ரணில் மேலும் தெரிவிக்கையில், “எனது வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் விரும்பினால் சிறிகொத்தாவில் திங்களன்று என்னை சந்திக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதியில் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட இருபகுதியினரும் அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment