எரிபொருள் பற்றாக்குறையால் தனியார் பஸ் போக்கு வரத்து சேவைகள் முழுமையாக பாதிப்பு : அகில இலங்கை தனியார் பஸ் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 7, 2022

எரிபொருள் பற்றாக்குறையால் தனியார் பஸ் போக்கு வரத்து சேவைகள் முழுமையாக பாதிப்பு : அகில இலங்கை தனியார் பஸ் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பஸ் போக்கு வரத்து சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. தூரப்பிரதேச போக்கு வரத்தினை இன்றும், நாளையும் மாத்திரமே முன்னெடுக்க முடியும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்

கொழும்பில் வௌ்ளிக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்து போக்கு வரத்து சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது குறுகிய தூர போக்கு வரத்து சேவைக்காக தனியார் பஸ்கள் மட்டுப்படுத்தப்படும், தூர பிரதேசங்களுக்கான போக்கு வரத்து சேவை இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்படும்.

தனியார் பஸ் போக்கு வரத்து சேவைக்கான எரிபொருள் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளது. எதிர்வரும் நாட்களில் தனியார் பஸ் சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையலாம்.

எரிபொருள் விநியோகத்தில் தனியார் பஸ் போக்கு வரத்து சேவைக்கு முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையினையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

எதிர்வரும் மாதம் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என குறிப்பிடப்படுகிறது. தனியார் பஸ் போக்கு வரத்து சேவை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்தால் அதன் பொறுப்பை அரசாங்கம் முழுமையாக ஏற்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment