கடன் திட்டத்தின் கீழ் நீர்த்தாரை வாகனம் வழங்கப்படவில்லை : அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 8, 2022

கடன் திட்டத்தின் கீழ் நீர்த்தாரை வாகனம் வழங்கப்படவில்லை : அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம்

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடனுதவி திட்டங்களின் கீழ் இலங்கை அரசாங்கத்தால் நீர்த்தாரை வாகனம் ஒன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என, இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கை வருமாறு, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடனுதவி திட்டங்களின் கீழ் இலங்கை அரசாங்கத்தால் நீர்த்தாரை வாகனம் ஒன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பாக நாம் அறிந்துள்ளோம்.

இவ்வாறான செய்தி அறிக்கைகளில் எந்தவிதமான உண்மைத்தன்மையும் இல்லை. இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட எந்தவொரு கடனுதவி திட்டங்களின் கீழும் நீர்த்தாரை வாகனங்களெதுவும் இந்தியாவால் விநியோகிக்கப்பட்டிருக்கவில்லை. 

தற்போதைய சூழலில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றிற்காகவே ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டது. 

இலங்கை மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்புகளுக்கு இவ்வாறான தவறான அறிக்கைகள் எந்தவிதமான ஆக்கபூர்வமான பங்களிப்பையும் வழங்கப்போவதில்லை.

No comments:

Post a Comment