தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின : அனைத்து மேன்முறையீடுகளும் ஒன்லைன் மூலம் மட்டுமே : கால எல்லை எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 24, 2022

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின : அனைத்து மேன்முறையீடுகளும் ஒன்லைன் மூலம் மட்டுமே : கால எல்லை எதிர்காலத்தில் அறிவிக்கப்படும்

2021 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2022 இல் தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மாணவர்கள் தாங்கள் பெற்ற பள்ளிகளின் அடிப்படையில் தெரிவாகியுள்ள பாடசாலைகளை இணையத்தில் https://g6application.moe.gov.lk/#/publicuser என்ற இணைப்பை அணுகுவதன் மூலம் சரிபார்க்கலாம்.

இந்த வெட்டுப்புள்ளிகளின்படி 2021 ஆம் ஆண்டிற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளுக்கமைய தகுதிபெற்று பாடசாலை அனுமதி பெறாத அல்லது வேறு நியாயமான காரணங்களுக்காக பாடசாலையை மாற்றுவதற்கு மாணவர்களுக்கு முறையிடுவதற்கு எதிர்காலத்தில் ஒன்லைன் மூலம் வசதி வழங்கப்படவுள்ள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேன்முறையீடுகள் செய்வது தொடர்பான கால எல்லை எதிர்காலத்தில் அறிவிக்கப்படுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்து மேன்முறையீடுகளும் குறிப்பிட்ட ஒன்லைன் முறையின் மூலம் மட்டுமே கல்வி அமைச்சிற்கு அனுப்பப்பட வேண்டுமெனவும், நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்படுகின்ற அல்லது அனுப்பி வைக்கப்படும் மேன்முறையீடுகள் நிராகரிக்கப்படும்.

அதற்கமைய, ஆண்கள் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம், றோயல் கல்லூரியில் மாணவர்களை இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 178 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பாடசாலைகளில் (தமிழ்) அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 163 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் கலவன் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில், ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரிக்கு 164 புள்ளிகளும் (கடந்த முறை 181) அறிவிக்கப்பட்டுள்ளன.

2021, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இவ்வருடம் ஜனவரி 22ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில், மார்ச் 13ஆம் திகதி அதன் பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

2021, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் கடந்த மார்ச் 14ஆம் திகதி பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டிருந்தது.

2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்த 340,626 பேரில் 335,128 பேர் தோற்றியிருந்ததோடு, விசேட தேவையுடைய 250 பேர் உள்ளிட்ட 20,000 பேருக்கு புலமைப்பரிசில் பெற தகுதி பெற்றுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

இதேவேளை, 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, 2022 க.பொ.த. உயர் தர பரீட்சை: ஒக்டோபர் 17 - நவம்பர் 12 வரை நடாத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, கடந்த மே 23 ஆம் திகதி ஆரம்பமாகி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.

ஆண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்
கொழும்பு ரோயல் கல்லூரி - 178
டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு 07 - 163
புனித மைக்கல் கல்லூரி, மட்டக்களப்பு - 158
யாழ். இந்துக் கல்லூரி - 158
இசிபத்தான கல்லூரி, கொழும்பு 05 - 156
காத்தான்குடி மத்திய கல்லூரி - 155
யாழ். மத்திய கல்லூரி - 155
மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி - 152
சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி - 152
புனித ஜோன் பொஸ்கோ, ஹட்டன் - 150
கிண்ணியா மத்திய கல்லூரி - 147

பெண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்
யாழ்ப்பாணம், வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை - 163
வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு - 162
ஹட்டன், புனித கெப்ரியல் பெண்கள் கல்லூரி - 155
மட்டக்களப்பு, சிசிலியா பெண்கள் கல்லூரி - 153
பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி - 149
கண்டி, பதியுத்தீன் மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் - 149
மாத்தளை ஆமினா மகா வித்தியாலயம் - 149
திருகோணமலை, ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி - 147

கலவன் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்
ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரி - 164
மாவலனல்லை, சாஹிரா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் - 158
சாவகச்சேரி இந்து கல்லூரி - 156
கல்முனை, கார்மெல் பற்றிமா கல்லூரி - 156
வவுனியா, தமிழ் மத்திய மகா வித்தியாலயம் - 155
மூதூர், மத்திய கல்லூரி - 154
மாவனல்லை, பதுரியா மகா வித்தியாலயம் - 154
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் - 153
கொட்டகலை, கேம்பிரிட்ஜ் கல்லூரி - 153
ஹாலி எல, ஊவா விஞ்ஞான கல்லூரி - 153
மஸ்கெலியா, புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் - 152
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி - 152
அட்டாளைச்சேனை, மத்திய கல்லூரி - 151
கெக்குணுகொல்ல தேசிய பாடசாலை - 151
அக்குரணை, அஸ்ஹர் மத்திய கல்லூரி - 150
கம்பளை, ஷாஹிரா கல்லுரி - 149
ஹப்புகஸ்தலாவ, அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை - 149
ஏறாவூர் அலிகர் மத்திய கல்லூரி - 149
சியம்பலாகஸ்கொட்டுவ, மதீனா தேசிய பாடசாலை - 149
அக்கரைப்பற்று, ஶ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி - 162

No comments:

Post a Comment