கொழும்பில் ஆமர் வீதியில் எரிவாயு விநியோகத்தின் போது 100 எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளதாக ஆமர் வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் ஆமர் வீதியில் இன்று பகல் எரிவாயு விநியோகம் இடம்பெற்றது. இதன்போது அங்கு எரிவாயு சிலிண்டர்களை வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த மக்கள் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிவந்த பாரவூர்தி மீது தாக்குதல் மேற்கொண்டதில் சுமார் 100 எரிவாயு சிலிண்டர்கள் வரை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த காணாமல் போன எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பில் அடுத்த கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆமர் வீதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment