பிரதமர் மஹிந்த பதவி விலகாவிடின் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் - தயாசிறி ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Friday, April 29, 2022

பிரதமர் மஹிந்த பதவி விலகாவிடின் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் - தயாசிறி ஜயசேகர

(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகாவிடின் மக்கள் வீதிக்கிறங்கி ஏனையவற்றை பார்த்துக் கொள்வார்கள். குடும்ப ஆட்சியை முடிவிற்கு கொண்டு வருவது அவசியமானது. சகல கட்சிகளையும் ஒன்றிணைத்தே இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இடைக்கால அரசாங்கத்தின் வியூகம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கவே முயற்சிக்கிறோம். மாற்று வழிமுறை ஊடாக அரசாங்கத்தில் ஒன்றினையும் நோக்கம் எமக்கு கிடையாது.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் அவதானம் செலுத்தி பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டு மக்கள் வீதிக்கிறங்கியுள்ளார்கள். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பாராளுமன்றத்தின் ஊடாக மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment