அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - News View

About Us

About Us

Breaking

Monday, April 4, 2022

அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றத்தில் சுயேச்சை குழுவாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் பதினான்கு (14) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை காபந்து அரசாங்கத்தை நியமிப்பதற்கான அவர்களின் அழைப்புகளுக்கு செவிசாய்க்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம் என்று கட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது.

புதிய நான்கு பேர் கொண்ட தற்காலிக அமைச்சரவையை ஜனாதிபதி நியமித்து, அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், பல அரசியல் கட்சிகள் அந்த அழைப்பை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment