(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றில் 113 பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் தரப்பினர் அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் பொதுஜன பெரமுன பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் என முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் திங்கட்கிழமை (4) மாலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஆளும் தரப்பின் உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்டான் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எம்மால் முடியும், எம்மால் முடியும் என குறிப்பிட்ட எதிர்த்தரப்பினர் தற்போது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதில் இருந்து பின்வாங்குகிறார்கள். நாடு தழுவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியும், ஐக்கிய மக்கள் சக்தியும் உள்ளது.
பொதுமக்களை வீதிக்கிறக்கி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளார்கள். மக்களின் போராட்டம் பேரழிவை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டுள்ளோம்.
பாராளுமன்றில் 113 பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் தரப்பினர் அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளிக்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் பாராளுமன்றில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும். தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து தரப்பினரது ஒத்துழைப்பினையும் ஜனாதிபதி கோரியுள்ளார்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் எதிர்த்தரப்பினருக்கு கிடையாது மாறாக குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment