(எம்.மனோசித்ரா)
மிரிஹான பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்து கழுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மார்ச் 31 ஆம் திகதி மிரிஹான பொலிஸ் பிரிவில் - பெங்கிரிவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அன்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டு கழுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் எந்தவொரு சந்தேகநபரும் உயிரிழக்கவில்லை.
எனவே இவ்வாறு வெளியாகும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment