சட்டத்தின் பிரகாரம் இதுவரை எந்த அமைச்சரும் பதவி விலகவில்லை : அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது - அனுர பிரியதர்ஷன யாப்பா - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 5, 2022

சட்டத்தின் பிரகாரம் இதுவரை எந்த அமைச்சரும் பதவி விலகவில்லை : அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது - அனுர பிரியதர்ஷன யாப்பா

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

சட்டத்தின் பிரகாரம் இதுவரை எந்த அமைச்சரும் பதவி விலகவில்லை. தனிப்பட்ட ரீதியில் ஒருவர் தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவிப்பதன் மூலம் அவ்வாறு விலகியதாக கருத முடியாது என அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்த்தார்.

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக குறிப்படுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சட்டபூர்வமாக எந்த அமைச்சரும் பதவி விலகவில்லை. அவர்கள் விலகியதாக தெரிவிப்பது சட்டபூர்வமானதல்ல. அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. பாராளுமன்றம் அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். இன்றேல் நிலைமை மோசமாகும். இந்த நிலையில் தனியான குழுவாக இயங்க முடிவு செய்துள்ளோம்.

அத்துடன் அமைச்சுப் பதவிகளில் விலகுவதாக இருந்தால் அது தொடர்பான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கே கையளிக்க வேண்டும். அவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை என்றார்.

இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுந்து, அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகினால் பாராளுமன்ற ஆசனங்களில் அமைச்சர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும். அவ்வாறான எந்த விடயமும் இடம்பெறவில்லை. அதேநேரம் பிரதி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்திருக்கின்றார். அவரது இடத்துக்கு ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும். அதனால் சபாநாயகர் இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், அமைச்சர்கள் பதவி விலகியமை மற்றும் பிரதி சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் எனக்கு ஜனாதிபதி அறிவிக்கவில்லை. ஜனாதிபதி அறிவித்த பின்னர்தான் அது தொடர்பில் பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

No comments:

Post a Comment