நாட்டில் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற பல சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கை காரணமாக சமூக ஊடக செயல்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) அறிவித்துள்ளது.
குறித்த கோரிக்கைக்கு அமைய சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையிலேயே பேஸ்புக், வட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கைத் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய சமூக வலைத்தள செயற்பாடுகளை இடை நிறுத்தியுள்ளதாக இலங்கையிலுள்ள தொலைபேசி சேவை வலையமைப்புகள் அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment