கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 4, 2022

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக பல்கலைக்கழகத்தில் இருந்து செங்கலடி சந்திவரையில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் இன்று (04) ஈடுபட்டனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் இந்த அரசாங்கத்துக்கு எதிரான பேராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்தனர்.

இதனையடுத்து ஒன்றிணைந்த மாணவர்கள் கோட்டா வீட்டுக்கு போ, மின்சாரத் தடை எரிபொருள், சமையல் எரிவாயு, பால்மா தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தி ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்களை வெளியேறுமாறு பல்வேறு வாகனங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக செங்கலடி சந்திவரை சென்று அங்கிருந்து மீண்டும் பல்கலைக்கழகத்தை சென்றடைந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து அந்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை பல்கலைகழகத்துக்கு முன்னால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவும் மாணவர்கள் தீப்பந்தம் ஏற்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment