முடிந்தால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காண்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சவால் விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு எதிராக செயற்பட்ட அநுர பண்டாரநாயக்க, மங்கள மற்றும் ஸ்ரீபதி போன்றோர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நீக்கப்பட்டார்கள். அத்தகைய விடயமே இப்பொழுதும் இடம்பெற்றுள்ளது.
2015 தேர்தலில் பெசில் ராஜபக்ஷவின தவறினாலே தோல்வி ஏற்பட்டதாக இந்தக் குழு பிரசாரம் செய்தது. எமது அரசாங்கமொன்றை உருவாக்கிக் காட்டுவேன் என்ற உறுதியுடன் செயற்பட்ட அவர் அதனை சாதித்துக் காட்டினார். கோட்டாபய எமது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார்.
இவர்கள் குற்றஞ்சாட்டுவது போன்று அவர் ஜனாதிபதியாக வர கனவு காணவில்லை. அந்த நோக்கம் அவருக்கு கொஞ்சமும் இருக்கவில்லை.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காட்டுவதாக கம்மன்பில தெரிவித்துள்ளார். முடிந்தால் பெரும்பான்மையை காண்பித்து பிரதமராகும் படி அவருக்கு சவால் விடுகிறேன். ஒரு எம்.பி மட்டும் உள்ள கட்சியால் 225 எம்.பிகளிடையே பெரும்பான்மையை காட்ட முடியுமா?
எரிசக்தி அமைச்சராக அவர் பல மாதங்கள் பணியாற்றினார். இல்லை, முடியாது என்று சொல்லி அமைச்சர் ஒருவரால் தப்பிக்க முடியாது. அவர் தனது அமைச்சு பொறுப்பை தவிர ஏனைய அனைத்தையும் செய்வார் என்றார்.
No comments:
Post a Comment