(எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடுகின்றது.
அதன் பிரகாரம் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் உட்பட பல சட்டமூலங்கள் அடுத்த வாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் செயற்குழு (கட்சி தலைவர்கள்) கூட்டம் நேற்று மாலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்படுள்ளது.
அதன் பிரகாம் 8ஆம் திகதி புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலம் விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறும்.
எதிர்வரும் 10 ஆம் திகதி வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதம் மதியம் 12.30 மணி வரை இடம்பெறுவதுடன் அதன் பின்னர் எதிர்க்கட்சி கொண்டுவரும் எரிசக்தி பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் 5.30 மணி வரை இடம்பெற தீர்மானிக்கப்படுள்ளது.
அத்துடன் 11 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேர் சமர்ப்பித்திருக்கும் தனிநபர் பிரேரணை தொடர்பான விவாதத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment