மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் : புதிய எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே - News View

About Us

About Us

Breaking

Saturday, March 5, 2022

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் : புதிய எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே

நாட்டில் மின் துண்டிப்பு ஏற்படாதவாறு மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக புதிய எரிசக்தி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள காமினி லொக்குகே தெரிவித்தார்.

அது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியுடன் கலந்துரையாடி அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

எரிசக்தி அமைச்சராக பதவி வகித்த உதய கம்மன்பில பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலும் எரிபொருள் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அரசாங்கத்தின் அமைச்சராக பதவி வகித்துக் கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு முரணாக செயற்பட முடியாது. 

தொடர்ச்சியாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியுமென்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டுமே தவிர இன்னும் மூன்று தினங்களுக்குத்தான் எரிபொருள் கையிருப்பு உள்ளது என்று அமைச்சர் ஒருவர் கூறுவது மக்களை அதைரியப்படுத்தும் செயலாகும்.

அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தோடு இணைந்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் உள்ளன. அதனை முறையாக முன்னெடுப்பது முக்கியம்.

புதிய அமைச்சராக பதவியேற்ற நான் மக்கள் முன் இன்னும் 03 நாட்களுக்கே எரிபொருள் உள்ளதென கூறினால் உடனடியாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும். அவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதற்கு நான் ஒருபோதும் தயாரில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment