திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு : அரபு வசந்தம் கோரி போராடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு - News View

About Us

Add+Banner

Breaking

  

Thursday, March 31, 2022

demo-image

திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு : அரபு வசந்தம் கோரி போராடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

Gotabaya-Mirihana-Protest-Arrest
நுகேகொடையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன் ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம் என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளமை கைது செய்யப்பட்ட நபர்கள் மூலம் தெரியவந்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் நுகேகொட, மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (31) இரவு 7.30 மணியளவில் பொது மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் குறித்த பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தை நள்ளிரவு வரை தொடர்ந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த கலகமடக்கும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

இதன் பின்னர், இன்று அதிகாலை 12.45 மணிக்கு உடன் அமுலாகும் வகையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட, களனி மற்றும் கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப் படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்தே நுகேகொடையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவந்துள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *