வத்தளையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது : 7 இலட்சத்துக்கும் அதிகமான பணமும் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 26, 2022

வத்தளையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது : 7 இலட்சத்துக்கும் அதிகமான பணமும் கைப்பற்றல்

(எம்.மனோசித்ரா)

கெரவலப்பிட்டி பிரதேசத்தில் ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பொலிஸ் பிரிவில் கெரவலப்பிட்டி பிரதேசத்தில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை 25 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவரிடமிருந்து ஒரு கிலோ 268 கிராம் ஹெரோயின், 7 இலட்சத்து 93 ஆயிரத்து 350 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெரவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவராவார்.

வெளிநாட்டிலுள்ள போதைப் பொருள் கடத்தல் காரரால் இந்த போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment