(எம்.மனோசித்ரா)
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கொட்டாஞ்சேனை பகுதியில் ஹெரோயின் மற்றும் சுமார் 78 இலட்சத்துக்கும் அதிக பணத்துடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் நேற்றுமுன்தினம் இரவு முன்னெடுக்கப்பட்ட இரு சுற்றிவளைப்புக்களில் , 52 மற்றும் 34 வயதுகளையுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர்களிடமிருந்து 106 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் போதைப் பொருள் வியாபாரத்தின் ஊடாக பெற்றுக் கொண்டதாக சந்தேகிக்கப்படும் 78 இலட்சத்து 23 ஆயிரம் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அத்தோடு இந்தியாவில் தலைமறைவாகியுள்ள நிலையில் இலங்கையில் போதைப் பொருள் கடத்தலை நிர்வகிக்கின்ற சந்தேகநபரது ஆலோசனைக்கமைய இவர்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment