சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
மழையின் குறுக்கீடு அடிக்கடி ஏற்பட்ட இப்போட்டியை அவுஸ்திரேலிய அணி டக்வத் லூயிஸ் (D/L) முறைப்படி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிடனி மைதானத்தில் இரவு போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் வணிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, பினுர பெனாண்டோ, சாமிக கருணாரத்ன, துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு, மழையின் குறுக்கீடு காரணமாக டக்வத் லூயிஸ் (D/L) முறைப்படி 19 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத்தப்பட்டது.
அதற்கமைய 19 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்த இலங்கை அணி, 122 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க 35 ஓட்டங்களையும், விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களையும் பெற்றனர்
பந்துவீச்சில் ஜோர்ஜ் ஹசில்வூட் 4 விக்கெட்டுகளையும் அடம் சம்பா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அந்த வகையில் 5 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரில் 1 - 0 என அவுஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கின்றது.
இத்தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) சிட்னி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment