புத்தளம் நாத்தாண்டிய தம்மஸ்ஸர தேசிய பாடசாலை மாணவியொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
நாத்தாண்டிய தேசிய பாடசாலையில் ஆறாம் வகுப்பில் கல்வி கற்கும் மேற்படி 11வயது மாணவி நாத்தாண்டி தப்போவ பகுதியைச் சேர்ந்த பி.எம்.டி. மனிஷா குமாரி பெர்னாண்டோ என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இரண்டு தினங்கள் சுகவீனமுற்ற நிலையில் அவர் மாரவில தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கடந்த 28ஆம் திகதி பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பியுள்ள மேற்படி மாணவி கடுமையான காய்ச்சல் காரணமாக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனையடுத்து அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளார்.
மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (31) உயிரிழந்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment